பரப்புரை_

பரப்புரை

80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் தமிழ் மொழி, உலகிலே அதிகம் பேசப்படும் மொழிகளுள் இருபதாவது இடத்தில் உள்ளது. தமிழ் எனும் பதம் மொழி தவிர, அதற்கப்பாலும் வேறு பல விடயங்களைக் குறிக்கின்றது. இது வீறார்ந்த பண்பாடு, பரந்த வரலாறு, கதை மரபுகள் என்பனவற்றைத் தன்னகத்தே கொண்ட நெய்தற் சித்திரச்சேலை ஆகும். தமிழ் இருக்கை முயற்சியானது இவ்வனுபவத்தை நுணுகி நோக்குவதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினர்க்காக இதனை முழுமையாகப் பேண வழி சமைக்கிறது. எங்கள் அயலவர், நண்பர்கள், குடும்பங்கள் என யாவரும் இவ்வனுபவத்தைப் பெறல் வேண்டும் என அவாவுகின்றோம். கனடாவின் மாண்புறு உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில், ஆய்வு, புலமை என்பவற்றை உள்ளடக்கிய தமிழ்க் கற்கைகளை மேற்பார்வை செய்வதற்கான தமிழ் இருக்கையை உருவாக்குவதன் மூலம், வருங்காலத் தலைமுறையினர்க்கான தமிழ்ப் பாரம்பரிய மரபுரிமைத் தேட்டத்தைப் பாதுகாப்போம். தமிழ் இருக்கையானது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்விசார் முயற்சிகளுக்கும், வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட இருப்பனவுக்கும் இடையில் ஒரு பாலமாக அமையும்; அத்துடன், உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் புலமையில் ஆர்வமுடைய எவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் கல்விசார்முயற்சிகளுக்குத் தளம் அமைத்துக் கொடுக்கும்.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நிறுவப்படவிருக்கும் அறக்கொடை இருக்கை இனி வருங்காலங்களில் தமிழ்க் கல்விசார் ஆய்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு தமிழ் இருக்கையின் வெற்றிக்குப் பக்கபலமாக விளங்கும். தமிழ்க் கற்கை நெறிகளில் பெருமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான திட்டம் இது.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலே சமூகமொன்றினால் வழங்கப்படும் நிதி உதவியுடன் இருக்கை ஒன்று அமைக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும். கனடா உட்பட உலகெங்கணும் வாழும் தமிழர் இம் முயற்சி குறித்துப் பெருமிதமடைகின்றனர். பல்கலைக்கழகமும் தமிழ்ச்சமூகத்துடன் இணைந்து இவ்விருக்கையை அமைப்பதில் மகிழ்வடைகின்றது.

நவீன பேச்சுமொழி செவ்வியல் வடிவங்களிலிருந்தும், முறைசார் எழுத்துத் தமிழிலிருந்தும் கணிசமான அளவு வேறுபடுகின்றது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள், கலை, சமூக சேவைகள், பொதுசன ஊடகங்கள் என உயிரோட்டமான சமூகத்தைக் கொண்ட ரொறன்ரோ தமிழ்க் குடிவரவாளருக்கு ஒரு பிரதான மையமாகும்.

இந்தியத் துணைக்கண்ட மொழியான தமிழ் இலங்கையிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் பேசப்படுகின்றது. சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 2000 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கியம் படைத்த தமிழ் , உலகில் மிக நீண்டகாலம் வாழும் செம்மொழிகளுள் ஒன்றாகும்.

d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்