பண்பாடு

பண்பாடு

தமிழராயிருத்தல் என்றால் என்ன? ‘இல்லை’ என்று தலையசைப்பதன் மூலம் நாம் ஆமோதித்தலை உணர்த்துகிறோம். இராப்போசனத்தின்போது, விருந்தினர்க்கு இரண்டாம் முறை, மூன்றாம் முறை என்று அவர்கள் வயிறார உண்ண உணவு பரிமாறுகிறோம். அன்புடன் எங்கள் குழந்தைகளைக் ‘குட்டி’ ‘குஞ்சு’ என்றும் எங்கள் கணவரை ‘அப்பா’ என்றும் அழைக்கிறோம். உங்கள் நாவிலிருந்து தமிழ் மொழி, தேன் போன்று ஒழுகுகிறது. நீங்கள் நேரம் போவதே தெரியாது அமிழ்ந்து போகக் கூடிய ஆழமான வரலாறும் பெருமையுடன் கொண்டாடும் உயிர்த்துடிப்பான பண்பாடும் கொண்டது தமிழ்.

1948 ஆம் ஆண்டிலேயே தமிழர் கனடாவில் குடியேறியதற்கான சான்றுகள் உண்டு, 1970 ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஐயாயிரம் தமிழ்க் குடியேற்றவாசிகள் இருந்தனர்.

ஆனால் 1980களிற்றான் கனடாவில் குடியேறும் அல்லது தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று இலங்கை, இந்தியா நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய ஏறத்தாழ 300,000 தமிழ் மக்களின் வதிவிடமாக கனடா விளங்குகின்றது. தமிழ்க் குடிவரவாளரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது.

எமது சமூகத்தில் ‘முதலாவதாக’ நிகழ்ந்த சில விடயங்களைக் கொண்டாடுவதில் நாம் பெருமையடைகிறோம்- கனடாப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழ் அங்கத்தவர், பொலிஸ் துறையின் முதற் தமிழ்த் தலைமை அதிகாரி, உலகப்புகழ் பெற்ற தாள வாத்தியப் பேராசிரியர், நெட்ஃப்லிக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிக்கும் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல் தமிழ் பெண்... இவ்வரிசையில் அடுத்ததாக விளங்குவது கனடாவின் முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் சமூகத்தினால் ஏற்படுத்தப்படும் முதற் தமிழ் இருக்கையாகும்.

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக தமிழ்க் கனேடியர்கள் கனேடிய சமூகத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளனர். எமது அடையாளத்தையும், விழுமியங்களையும் பிரதான கலாச்சாரத்தில் நிலைநாட்டி வருகிறோம். எடுத்துக்காட்டாக, தமிழரல்லாதார் எமது தோசை, இட்டலி, கொத்து ரொட்டி என்பவற்றை விரும்பி உண்கின்றனர் என்று நீங்கள் எப்பொழுதும் கேள்விப்படுகிறீர்கள் அல்லவா?

வருங்காலத் தலைமுறையினர்க்காகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ்ப் பண்பாடு தனக்கெனச் சொந்தமான அழகுடையது. ஆனால், பண்பாடு ஒருபோதும் நிலையானதன்று. அது காலப்போக்கில் பரிணாமமுறுவது; சூழலுடன் இசைந்து உருவாவது. கனடாவில் எம்மால் ஏற்படுத்தப்படும் பண்பாட்டு மாற்றங்களுக்கூடாக இவ்வுண்மையைக் கண்கூடாகக் காண்கிறோம்.

உலகின் மிகத் தொன்மையான வாழும் மொழி தமிழாகும்.

பலரால் பேசப்படுவது

உலகெங்கணும் வாழும் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் தமிழ் பேசப்படுகின்றது.

பிரதான செம்மொழிகள்

ஆசியா முழுவதிலும் காணப்படும் பழமையான எழுத்து வழக்கு மரபுகளில் தமிழும் ஒன்று.

வரலாற்று மொழிகள்

உலகின் மிகத் தொன்மையான வாழும் மொழி தமிழாகும்.

d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்