பெருமையுடன் பின்வரும் சமூக பங்குதாரர்கள் மூலம் ஸ்பான்சர்

கனடாவில் ஏறத்தாழ 300,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மக்கள் தொகை அதிகரித்துச் செல்கின்றது.
கனடாவில் அதிகமாகப் பேசப்படும் 16 மொழிகள்.
ரொறன்ரோ மாநகரில் ஏறத்தாழ 200,000 தமிழர் வாழ்கின்றனர். இம்மக்கள் தொகை கணிசமான அளவு வளர்ந்து வருகிறது.
ரொறன்ரோவில் அதிகமாகப் பேசப்படும் 8 மொழிகள்.
உலகிலே அதிகமாகப் பேசப்படும் 20 மொழிகள் (ஏறத்தாழ 80 மில்லியன் மக்களால்).

கற்றல்

துறை வல்லுனர்களின் ஆய்விலிருந்தும், ஆழ்ந்தகன்ற கல்வியறிவிலிருந்தும் கற்றல்.

இணைத்தல்

உலகளாவிய ரீதியில் தமிழ்ப் புலமையாளர்களின் செயற்பாடுகளுடனும், அறிவுத்தேட்டத்துடனும் இணைத்தல்.

பகிர்தல்

தலைமுறைகளுக் கிடையிலான கதைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல்.

பாதுகாத்தல்

பழைமையான தமிழ் மொழியையும், பண்பாட்டு மரபுகளையும் கல்வி சார் கண்ணோட்டத்தில் பாதுகாத்தல்.

இத்திட்டத்தில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?

இத்தமிழ் இருக்கையானது உலகத் தமிழ் மக்களுக்குச் சொந்தமானது. இது ஒரு கூட்டு முயற்சியாகும். ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாகத்தில் தமிழ் இருக்கையைத் தாபிக்கும் எங்கள் இலக்கினை அடைய, உங்கள் உதவியை நாடுகின்றோம்.

இப்பொழுதே நிதியுதவி அளியுங்கள்.

'சிறுதுளி பெரு வெள்ளம்.' நீங்கள் வழங்கும் எந்த அளவிலான நிதிப்பங்களிப்பும் இத்திட்டம் நிறைவேற வழி சமைக்கும். உங்கள் நன்கொடையின் நூறு வீதமும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கே நேரடியாகச் செல்லும். அத்துடன் அத்தொகை வரிவிலக்கிற்கும் தகுதியானது.

இப்பொழுதே நிதியுதவி அளியுங்கள்

எங்கள் பக்கத்தைப் பகிருங்கள்.

இச்செய்தியைப் பரப்ப உங்கள் உதவி எமக்குத் தேவை. எங்கள் பக்கத்தை சமூக வலைத்தளங்களில் உங்களின் நண்பர்களுடனும், குடும்பத்தினர்களுடனும் அல்லது நீங்கள் இணைந்திருக்கும் வலையமைப்புகளுடனும், நிறுவனங்களுடனும் தயவுசெய்து பகிருங்கள். இத்திட்டம் தமிழ்ச் சமூகம் முழுவதிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

எங்கள் வலைப்பதிவிற்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.

நீங்கள் அறிந்த தமிழ்ப்பாரம்பரியம் அல்லது பண்பாடு தொடர்பான விடயங்களை உலகத்துடன் பகிர விரும்புகிறீர்களா? அது நீங்கள் இரசித்துச் செய்யும் சமையற்குறிப்பாக இருக்கலாம். அல்லது தனிப்பட்ட கதையாகவும் இருக்கலாம். எங்கள் வலைப்பதிவுக்குப் பங்களிப்புச் செய்யத் தொடர்பு கொள்ளுங்கள்.

எங்கள் வலைப்பதிவுச் செய்தி மடலைப் பெற பதிவு செய்யுங்கள்_

இந்த செயல் முறை

01

நிதி திரட்டும்

முதல் படி, நிதி திரட்டுவதற்கு ஒரு மொத்த $3 மில்லியன் (CAD) நிதி திரட்ட ஒன்றாக வேலை, ஒரு தமிழ் நாற்காலி உருவாக்க ஆதரவு. இந்த நிதிகள் நேரடியாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்துக்கு செல்கின்றன.

02

தேர்வு

அடுத்ததாக, ரொறன்ரோ பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கொள்கைகள் மற்றும் செயல்முறைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செயன்முறையை ஆரம்பிக்கவுள்ளது.

03

நிலைநாட்டுதல்

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர், தமிழ் நாற்காலி ரொறன்ரோ ஸ்காபுரோ வளாகத்தில் உள்ள ஒரு திணைக்களத்தின் கல்வி அலகின் அடிப்படையில் அமையும்.

கேள்வி/பதில்

இன்னும் ஆர்வமா?

தமிழ் நாற்காலி முயற்சி பற்றி அதிக கேள்விகள் வேண்டுமா? நீங்கள் இன்னும் இங்கே கற்க முடியும், அல்லது எங்களை தொடர்பு!

பலரால் பேசப்படுவது

உலகெங்கணும் வாழும் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் தமிழ் பேசப்படுகின்றது.

பிரதான செம்மொழிகள்

ஆசியா முழுவதிலும் காணப்படும் பழமையான எழுத்து வழக்கு மரபுகளில் தமிழும் ஒன்று.

வரலாற்று மொழிகள்

உலகின் மிகத் தொன்மையான வாழும் மொழி தமிழாகும்.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நிறுவப்படவிருக்கும் அறக்கொடை இருக்கை இனி வருங்காலங்களில் தமிழ்க் கல்விசார் ஆய்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு தமிழ் இருக்கையின் வெற்றிக்குப் பக்கபலமாக விளங்கும். தமிழ்க் கற்கை நெறிகளில் பெருமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான திட்டம் இது.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலே சமூகமொன்றினால் வழங்கப்படும் நிதி உதவியுடன் இருக்கை ஒன்று அமைக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும். கனடா உட்பட உலகெங்கணும் வாழும் தமிழர் இம் முயற்சி குறித்துப் பெருமிதமடைகின்றனர். பல்கலைக்கழகமும் தமிழ்ச்சமூகத்துடன் இணைந்து இவ்விருக்கையை அமைப்பதில் மகிழ்வடைகின்றது.

நவீன பேச்சுமொழி செவ்வியல் வடிவங்களிலிருந்தும், முறைசார் எழுத்துத் தமிழிலிருந்தும் கணிசமான அளவு வேறுபடுகின்றது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள், கலை, சமூக சேவைகள், பொதுசன ஊடகங்கள் என உயிரோட்டமான சமூகத்தைக் கொண்ட ரொறன்ரோ தமிழ்க் குடிவரவாளருக்கு ஒரு பிரதான மையமாகும்.

இந்தியத் துணைக்கண்ட மொழியான தமிழ் இலங்கையிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் பேசப்படுகின்றது. சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 2000 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கியம் படைத்த தமிழ் , உலகில் மிக நீண்டகாலம் வாழும் செம்மொழிகளுள் ஒன்றாகும்.

கூச்சம் வேண்டாம், சொல்லுங்க வணக்கம்!

d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்