தமிழ்_

 மொழி

பண்டு தொட்டு இற்றை வரை ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் திகழும் ஒரே ஒரு தொன்மையான மொழி தமிழே ஆகும். தமிழில் காலத்தால் முந்திய சங்க இலக்கியம் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2381 செய்யுட்கள் கொண்ட 18 நூல்களின் தொகுப்பாகும். மேற்குறிப்பிடப்பட்ட 473 புலவர்களுள் 30 பெண் புலவர்களும் அடங்குவர். இந்திய மொழிகளிலே மிகப் பழைமையான இலக்கியத்தைக் கொண்ட தமிழ் மொழியை இந்திய அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு செம்மொழியாகப் பிரகடனம் செய்தது. தமிழிலக்கணத்தின் அடிப்படை நூலாக விளங்கும் தொல்காப்பியம், மிகப்பழைமையான தலைசிறந்த படைப்பாகும். இரண்டடிகளாலான குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் அறம், ஒழுக்கநெறி சார்ந்த இலக்கியங்களுள் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது. உலகளாவிய அதன் பொதுமையும், மதச்சார்பற்ற தன்மையும் இந்நூலுக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்துள்ளன.

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொறிசியஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழராலும், புலம் பெயர்ந்த தமிழராலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் எனும் இரு நாடுகளிலும் தமிழ் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தமிழே தனி ஆட்சி மொழியாகத் திகழ்கிறது.

உலகில் செம்மொழிகளுள் எல்லாம் மிகப்பழமையான ’வாழும் மொழி’ தமிழ் மொழியே ஆகும். உலகப் புகழ்பெற்ற புலமையாளரும், கவிஞருமான ஏ.கே. இராமானுஜன் ”சமகால இந்தியாவில், செவ்வியற் பழமையின் தெளிவான தொடர்ச்சி கொண்ட ஒரே ஒரு மொழி” என்று இதனை வர்ணிக்கின்றார். தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் பன்மைத்துவமும் பண்புநலமும் காரணமாக அது “உலகின் தலைசிறந்த செவ்வியற் பெரு மரபுகளிலும், இலக்கியங்களிலும் ஒன்றாகக்” கருதப்படுகின்றது. பாறைச் சாசனங்களிலும், வீரர் நடுகற்களிலும் காணப்படும் காலத்தால் முந்திய கல்வெட்டுப்பதிவுகள் ஏறத்தாழப் பொது சகாப்தத்திற்கு முந்திய 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் இலங்கையிலும், தாய்லாந்திலும் எகிப்திலும் கிடைத்த வர்த்தகப் பொருட்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மக்கள்

எமது ’தமிழ்த்துவத்தை’ அல்லது தமிழராக இருக்கும் தன்மையை வரையறுக்கவோ, அளவிடவோ இயலாது. எமது ’தமிழ்த்துவம்’ எமது கதைகளில் உள்ளார்ந்து இலங்குகிறது. அக்கதைகள் ஆற்றல், நெகிழ்ச்சி, கடின உழைப்பு, அடக்கம், விருந்தோம்பல், கண்டிப்புடன் கூடிய அன்பு, நியாயத்திற்கு ஒவ்வாத சமூக விதிமுறைகளை எதிர்த்தல், ஒடுக்குமுறையை முறியடித்தல், ஒருமைப்பாட்டினைக் கட்டியெழுப்புதல் என்பன பற்றியனவாகும். வருங்காலத் தலைமுறையினர்க்கு மிகச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்திட முயலும் நாம், இக்கதைகளையே அவர்களுக்கு அளிக்க விழைகின்றோம். 2500 ஆண்டுகளாகத் தொடரும் பிணைப்பு அறாதவாறு, எதிர்காலச் சந்ததியினர்க்குத் தமிழ் மொழியைப் புகட்டுவது ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும். தமிழின் பல் இயல்புகளைப் பாருங்கள்.

மொழி
d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்